ஐயா மோடிக்கு உடம்பு சரி இல்லனா எந்த மருத்துவர் கிட்ட போவார்.? நீட் குறித்து சீமான் சாடல்.!

நீட் தேர்வு முக்கியம் என்றால் நீட்டிற்கு முன்னாடி பயின்ற மருத்துவர்கள் சரியில்லையா.?  ஐயா மோடிக்கு உடம்பு சரி இல்லைனா யாருகிட்ட மருத்துவம் பார்ப்பார்கள்? – சீமான் கருத்து.

இன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, நீட் தேர்வு, ஆ.ராசாவின் மனு தர்மம் பற்றிய கருத்துகள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறினார்.

மனுதர்மத்தில் சூத்திரர்கள் பற்றி எம்.பி ஆ.ராசா பேசுகையில், நாமெல்லாம் விபசாரி மகன் என்று மனு தர்மத்தில் குறிப்பிடபட்டுள்ளது என பேசியிருப்பார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக அமைந்தது.

இதுகுறித்து சீமான் பேசுகையில் , ‘மனுதர்மத்தில் எழுதி வைத்துள்ளதை தான் ஆ.ராசா பேசியுள்ளார். அவராக ஒன்றும் பேசவில்லை. எழுதி வைத்து இருந்ததை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். மனு தர்மத்தின் அடிப்படையில் தான் இங்கு எல்லாம் நடக்கிறது. ஒரே நாடு ஒரே தேசம் ஒரே வரி அரசியல் சாசனத்தில் இருக்கிறதா.? ஜெய் ஸ்ரீராம் அரசியல் சாசனத்தில் இருக்கிறதா? என தனது கருத்தை கூறினார்.

மேலும், நீட் தேர்வு முக்கியம் என்றால் நீட்டிற்கு முன்னாடி பயின்ற மருத்துவர்கள் சரியில்லையா.?  ஐயா மோடிக்கு உடம்பு சரி இல்லைனா யாருகிட்ட மருத்துவம் பார்ப்பார்கள்? நீட் பயின்ற மாணவர்களிடமா.? அல்லது பழைய மருத்துவர்களிடமா.? ‘ என தனது கருத்தை தெரிவித்தார் நாம் தமிழ்ர் கட்சி தலைவர் சீமான்.

Leave a Comment