பிரதமர் மோடியின் தனிச் செயலாளர்…இனி இவர்தான்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தனிச் செயலாளராக (பிஎஸ்) ஐஎஃப்எஸ் விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2004 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான விவேக் குமார் பிரதமர் அலுவலகத்தின் (PM0) இயக்குநராக இருந்து வரும் நிலையில்,அவரை பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக நியமிக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக (பிஎஸ்) ஐஎஃப்எஸ் விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையில், பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக இதுவரை இருந்து வந்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான சஞ்சீவ் குமார் சிங்க்ளா, இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதராக பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்,தற்போது பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவேக் குமார் அவர்கள் ஐஐடி மும்பையில் இரசாயனப் பொறியியலில் பிடெக் பட்டம் பெற்றவர் மற்றும் ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவில் தூதரகப் பதவிகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment