தமிழகத்தில் தனியாக நின்று போட்டியிட்டு தாமரை மலர்ந்தால் பார்க்கலாம் – கீ.வீரமணி

தமிழகத்தில் தனியாக போட்டியிட்டு, தாமரை மலர்ந்து காட்டட்டும், அப்போது அது தடாகத்தில் இருந்து மலருகிறதா? அல்லது பாறையின் மீது மலருகிறதா? என்று பார்ப்போம்.

தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், மே-2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், திமுக பெரும்பானமையான இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது.

இதுகுறித்து, திராவிட கழக தலைவர் கி.வீரமணி சென்னையில், மு.க.ஸ்டாலின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றதை வளர்ச்சியாக கருத முடியாது. அடுத்தவரின் தோல் மீது ஏறி நின்று வெற்றி பெற்றால் அதனை எப்படி வளர்ச்சி என்று சொல்ல முடியும்.

இன்னொருவர் தோல் கிடைத்துள்ளது என்பதற்காக, அந்த தோளில் ஏறி நின்று கொண்டு எங்களது வளர்ச்சியை பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் தனியாக போட்டியிட்டு, தாமரை மலர்ந்து காட்டட்டும், அப்போது அது தடாகத்தில் இருந்து மலருகிறதா? அல்லது பாறையின் மீது மலருகிறதா? என்று பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.