கல்வி Costly -ஆக இருந்தால், Scholarship தயாராக இருக்கிறது – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

காஞ்சிபுரம் IIITDM கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்துள்ளது.

உலகம் எங்கு முன்னேறுகிறது. எந்த தொழில்நுட்பம் நோக்கி நகர்கிறது என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை கல்விக்கான சேமிப்புக்காக பெற்றோர் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் மாணவர்கள் தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அனைவரும் சிறந்த, தரமான கல்வியைக் கற்க வேண்டும் கல்வி Costly -ஆக இருந்தால், Scholarship தயாராக இருக்கிறது மாணவர்களுக்கு, பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தியா வளர்ச்சியை நோக்கிய சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது 2028-ம் ஆண்டில் சீனாவை விட இந்தியாவில் இளைஞர்கள் அதிகமாக இருப்பார்கள். இளைஞர்கள், மாணவர்கள் இந்தியாவை 2047-ல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் வல்லரசாக்க உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment