தேர்தலில் என்னை தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன்- தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு

தேர்தலில் என்னை தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன் என தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் சர்ச்சையான முறையில் பேச்சு. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கர்நாடாகாவில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் என்னை தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன் என தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் சர்ச்சையான முறையில்  பேசியுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில், ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் பிரீத்தம் கவுடா  தோல்வியடைந்தார்.

அவர் தனது  தோல்வி குறித்து, தேர்தலில் என்னை தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன்; ஒரு குறிப்பிட்ட மக்கள் நமக்கு தீர்ப்பு வழங்கியுள்ளனர்; அந்த மக்களுக்கு வரும் நாட்களில் நாங்கள் யார் என்பதை காண்பிப்போம் என தெரிவித்துள்ளார்.  பிரீத்தம் கவுடாவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.