கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இருந்தேன் – டிடிவி

தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம் என டிடிவி தினகரன் பேட்டி. 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம்; அனைத்து விஷயங்களிலும் எதிர்த்து பேசுவது முறையானது அல்ல என தெரிவித்துள்ளார்.

நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்கிறோம்; 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், திமுக எனும் தீய சக்தியை எதிரித்து கூட்டணி அமைப்பதற்காக தொடர்ந்து கூறி வருகிறோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இருந்தேன். ஆனான் நான் கேட்ட 40 தொகுதிகளை அதிமுக தர தயாராகி இல்லை. சிலரின் பதவி ஆசையால் அது நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment