நானும் அவரை மிஸ் பண்றேன் (Me too) – ரசிகர்களுக்கு கோலி ரிப்ளை.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் We Miss You Dhoni என எழுதப்பட்ட பதாகைகளை விராட் கோலியிடம் காண்பித்த ரசிகர்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் எடுத்தன. 195 ரன் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 195 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதனிடையே, இந்திய அணி பந்துவீசும் போது பில்டிங்கில் நின்று கொண்டிருந்த கேப்டன் கோலியிடம் We Miss You Dhoni என எழுதப்பட்ட பதாகைகளை ரசிகர்கள் காண்பித்தனர். அதற்கு சிரித்துக் கொண்டே Me too என பதிலளித்துள்ளார் விராட் கோலி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் தோனியை pride of nation என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோன்று தவான் 39 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். ஆனால், ரிப்ளேவில் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மேத்யூ வேட்  தாவனிடம், நான் தோனி அல்ல, தோனி அளவுக்கு வேகம் இல்லை என கூறினார். இவர்கள் பேசும் ஆடியோ ஸ்டெம்பில் இருந்த மேக்கில் பதிவாகியது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்