நான் ரஜினி சாரின் எனர்ஜியை பார்த்துவிட்டேன்! பிரபல இயக்குனர் அதிரடி!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார்.  இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் குறித்து சில தவறான கருத்துக்களும்  வெளியானது. இதுகுறித்து, இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர்  கூறுகையில், தர்பார் படம் குறித்து சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை பதிவு செய்து வருவதாக கூறியுள்ளார்.  மேலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார், ரஜினி சார்  இணைந்து இந்த பொங்கல் திருவிழாவுக்கு சிறப்பான பொழுதுபோக்கு  தந்துள்ளனர் என்றும், பல வருடங்களுக்கு பிறகு ரஜினி சாரின் எனர்ஜியை பார்த்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.