எல்லோரையும் போல என்னால் இருக்க முடியாது! நடிகர் சிம்பு அதிரடி!

  • முதல்முறையாக முஸ்லிம் கேரக்டரில் நடிக்கிறேன்.
  • வித்தியாசம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட மனிதனாக இருக்க வேண்டும்.

கடந்த 2018-ம் ஆண்டில் சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் நீண்ட நாட்களாக தொடங்கப்படாமலேயே இருந்து வந்த இத்திரைப்படம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில், இவர் அப்துல் காலிக் என்ற முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாப்பாத்திரம் குறித்து அவர் கூறுகையில், முதல்முறையாக முஸ்லிம் கேரக்டரில் நடிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்களைப் பற்றி சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது அது எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய நண்பர்களில் முக்கால் வாசி பேர் முஸ்லிம்கள் தான்.

பெரியார் பாடல் பாடுவது, சபரி மலைக்குச் செல்வது, முஸ்லிம் பெயரில் நடிப்பது சிலருக்கு குழப்பமாக இருக்கக் கூடும். எல்லோரையும் போல என்னால் இருக்க முடியாது. வித்தியாசம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட மனிதனாக இருக்க வேண்டும். அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறேன். அது யுவன் சங்கர் ராஜாவின் பெயராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி  தெரிவித்துள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.