குஜராத் மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், அனைத்து மக்களும் மிகவும் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், அகமதாபாத் ராணிப்பில் உள்ள நிஸான் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். வாக்களித்த பின் பேசிய நரேந்திர மோடி, எனது தாய் வீடான குஜராத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மக்களவை தேர்தலில் இளைஞர்கள், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.