உங்களால் மனித வாழ்வு சிறந்தது…! நோபல் பரிசுகளை வென்றிருக்கும் அமெரிக்கநாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் – பீட்டர் அல்போன்ஸ்

நோபல் பரிசு பெற்ற டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த சிறுபான்மை நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.

டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு “வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக” நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றை தொடாமல் உணரக்கூடிய சென்சார் கருவியைக் கண்டுபிடித்ததற்காக இந்த பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஐம்புலன்களின் இயக்கம்பற்றிஇதுவரை அறியப்படாத படைப்பின் மர்மமுடிச்சுகளை அவிழ்த்து,மனிதமுயற்சிகளின் சக்தியை நிரூபித்து,நோபல் பரிசுகளை வென்றிருக்கும் அமெரிக்கநாட்டு விஞ்ஞானிகள் டேவிட்ஜூலியஸ்,ஆர்டெம் பட்டாபவுஷியன் ஆகியொருக்கு பாராட்டும்,நன்றிகளும். உங்களால் மனிதவாழ்வு சிறந்தது!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.