வெயிலுக்கு சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி ?

18
  • வெயிலுக்கு சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி ?

நமது அன்றாட வாழ்வில் பழங்கள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. மாம்பழம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாம்பழம் என்றாலே மிகவும் பிடித்தமானது.

கோடை காலத்தில் நாம் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்புகிறோம். ஆனால், அதிகமாக நாம் மேலைநாட்டு குளிர்பானங்களை தான் விரும்பி குடிக்கிறோம். இந்த பானங்கள் நமது உடல் நலத்திற்கு ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கிறது.

Related image

இதனை விட்டுவிட்டு, நாம் இயற்கையான பழங்களை வைத்து ஜூஸ் செய்து குடித்தால், அது நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கிறது. தற்போது இந்த பதிவில், மாம்பழ ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பெரிய மாம்பழம் – 4
  • பால் – 2 கப்
  • வெண்ணிலா ஐஸ்கிரிம் – 2 கப்
  • ஜெல்லி – 4 ஸ்பூன்

செய்முறை

முதலில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்வதற்கு, பாலை சுண்டைக் காய்ச்சி குளிர வைக்க வேண்டும். பிறகு மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Related image

அதன் பிறகு, குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்து, அதனை மாம்பழ சாறுடன் சேர்க்க வேண்டும். பிறகு பால் கலந்த மாம்பழச்சாற்றை பிரிட்ஜில் சுமார் 3 மணி நேரம் வைத்து குளிர வைக்க வேண்டும். பிறகு வெளியே எடுத்து, அதனுடன் வெண்ணிலா ஐஸ்கிரீமை சேர்த்து பரிமாற வேண்டும். இப்பொது  சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் தயார்.