நோன்பு கஞ்சி செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

நோன்பு கஞ்சி -நோன்பு கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்:

  • அரிசி =1 கப்
  • பாசி பருப்பு =1/2 கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் =அரை ஸ்பூன்
  • வெங்காயம் =1
  • தக்காளி =1
  • பச்சை மிளகாய் =2
  • நெய் =1 ஸ்பூன்
  • எண்ணெய் =1ஸ்பூன்
  • சீரகம் =1 ஸ்பூன்
  • வெந்தயம் =1/2 ஸ்பூன்
  • துருவிய தேங்காய் =5 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • பட்டை =அரை இன்ச் ,கிராம்பு =2

செய்முறை:

குக்கரில் ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ,வெந்தயம் ,சீரகம்  சேர்க்கவும் ,பின்பு பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும். பின்பு அதில்   இஞ்சி பூண்டு விழுது ,வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கழுவி வைத்துள்ள அரிசியையும் சேர்த்து கிளறி விடவும்.பொங்கலுக்கு சேர்க்கும் தண்ணீரின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக சேர்த்து  கொள்ளவும்.

தண்ணீர் உங்கள் தேவைக்கு ஏற்பவும்  ஊற்றி கொள்ளலாம் . பிறகு நான்கிலிருந்து ஐந்து வரை விசில் விட்டு, விசில் அடங்கியதும் துருவி வைத்துள்ள தேங்காய், கொத்தமல்லி இலைகள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கினால் நோன்பு கஞ்சி தயாராகிவிடும்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.