சுவையான ஷாங்காய் ஆப்பிள் செய்வது எப்படி ?

சுவையான ஷாங்காய் ஆப்பிள் செய்வது எப்படி ?

Default Image
  • சுவையான ஷாங்காய் ஆப்பிள் செய்வது எப்படி ?

நமது அன்றாட வாழ்வில் பழங்கள் முதன்மையான இடத்தை பெற்றுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆப்பிள் பலத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆப்பிளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது.

Image result for ஆப்பிள்தற்போது இந்த பதிவில் ஆப்பிளை கொண்டு சுவையான ஷாங்காய் ஆப்பிள் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • ஆப்பிள் – 4
  • முட்டை – 1
  • மைதா – 3 மேசை கரண்டி
  • தண்ணீர் – கால் லிட்டர்
  • எள் – 1 ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஷாங்காய் ஆப்பிள் செய்வதற்கு முதலில் தோலையும், விதைகளையும் நீக்கி விட்டு, ஆப்பிள்களை பெரிய சதுரங்களாக வெட்ட வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் முட்டையையும், மைதாவையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையில் ஆப்பிள் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

Image result for ஆப்பிள்

அதன்பின், 1 மேஜை கரண்டி எண்ணெயை சூடாக்கி, அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின் அதில் வறுத்த ஆப்பிள் துண்டுகளையும், எல்லையும் சேர்க்க வேண்டும். பின் அதனை தண்ணீரில் போட்டு குளிர வைக்க வேண்டும். குளிர்ந்தவுடன் தண்ணீரை வடிகட்டி பரிமாற்ற வேண்டும். இப்பொது சுவையான ஷாங்காய் ஆப்பிள் தயார்.

Join our channel google news Youtube