சுவையான பாசிப்பருப்பு அல்வா செய்வது எப்படி?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் ஒன்று அல்வா. இந்த அல்வாவில் பல வகையான அல்வாக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பாசிப்பருப்பு – கால் கிலோ
  • சர்க்கரை – 100 கிராம்
  • நெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • வறுத்த முந்திரி – 4
  • ஏலக்காய் – 2 (பொடியாக்கியது)
  • பைனாப்பிள் எசன்ஸ் – கால் ஸ்பூன்

செய்முறை

முதலில் பாசிப்பருப்பை ஒன்றரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வாணலியில் சிறிது நெய் ஊற்றி பாசிப்பருப்பு விழுதை சேர்த்து கிளற வேண்டும்.

பின் பாசிப்பருப்பின் பச்சை வாசனை போனதும், சர்க்காரை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக முந்திரி, ஏலக்காய், பைனாப்பிள் எசன்ஸ் ஊற்றி கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.