மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி?

நாம் மாலை நேரங்களில் ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்று விரும்புவதுண்டு. தற்போது இந்த பதிவில், மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை

  • வேர்க்கடலை – ஒரு கப்
  • கடலை மாவு – 2 மேசைக் கரண்டி
  • அரிசி மாவு – 2 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – காரத்துக்கு ஏற்ப
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • பெருங்காயம் – கால் தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவேண்டும். பின் தோலுடன் இருக்கும் வேர்கடலைகள்தான் இதற்கு சுவையாக இருக்கும். எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மைக்ரோவேவ் செப் பவுலில் கலவையாக செய்துக் கொள்ள வேண்டும். 

பின் மைக்ரோவேவ்வில் 6 நிமிடங்கள் செட் செய்து, வேர்க்கடலை கலவையை இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, கலந்து விடவேண்டும். பிறகு மீண்டும் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்து, மீதமுள்ள எண்ணெய் சேர்த்து கலந்து விட வேண்டும். மேலும் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்து தட்டில் ஆற விட வேண்டும். இப்பொது சுவையான வேர்க்கடலை பக்கோடா தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.