தேங்காய் இல்லாமல் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான குருமா எப்படி செய்வது?

எப்பொழுதுமே நான் தோசை, இட்லிக்கு சட்னி அல்லது குருமா செய்தாலும் நிச்சயமாக தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து தான் நாம் செய்வோம். ஆனால், உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை மட்டும் இருந்தாலே போதும் காலை நேரத்தில் உங்கள் தோசை, இட்லிக்கு அட்டகாசமான குருமாவை பத்து நிமிடத்தில் செய்து அசத்தலாம். இதை சப்பாத்தி மற்றும் பூரிக்கு கூட வைத்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள வேண்டுமா, வாருங்கள் அறியலாம்.

தேவையான பொருட்கள்

  • சோம்பு
  • பச்சைமிளகாய்
  • வெங்காயம்
  • எண்ணெய்
  • கசகசா
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • தக்காளி
  • மஞ்சள்தூள்
  • மிளகாய்த்தூள்

செய்முறை

முதலில் மிக்ஸி ஜார் எடுத்துக்கொண்டு அதில் பொட்டுக்கடலை, சோம்பு மற்றும் கசகசா ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பொடி போல நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கட்டி படாமல் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி ஆகியவை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அனைத்தும் நன்றாக வதங்கி வந்ததும் பொட்டுக் கடலையை கரைசலை ஊற்றி நன்றாக கலந்து 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால் அட்டகாசமான குருமா வீட்டிலேயே தயார். ஒருமுறை இவ்வாறு செய்து சாப்பிட்டு பாருங்கள் நிச்சயம் அடிக்கடி செய்வீர்கள்.

author avatar
Rebekal