தித்திக்கும் சுவையில் ஓட்ஸ் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

ஓட்ஸ் தர்பூசணி பாயாசம் குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளில் ஒன்று. இதனை விழாக்காலங்களிலும் நாம் செய்து சாப்பிடலாம்.

  • தித்திக்கும் சுவையில் ஓட்ஸ் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி ?

தித்திக்கும் சுவையில் ஓட்ஸ் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்பதை இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் மாவு – 4 மேசைக் கரண்டி

பால் – 1/2  லிட்டர்

தர்பூசிணி சாறு – கால் லிட்டர்

சக்கரை – 5௦ கிராம்

முந்திரி – பத்து

பாதாம் – பத்து

செய்முறை:

 

முதலில் பாலை காய்ச்சி ஆறவைத்தது எடுத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு ஒரு கிண்ணத்தை எடுத்து ஓட்ஸ் மாவை தண்ணீரில் நன்கு கரைத்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

ஓட்ஸ் நன்றாக வெந்தவுடன் சர்க்கரை ,பால் ஊற்றி நன்கு கிளறவேண்டும். பால் நன்கு கொதித்தவுடன் தர்பூசிணி சாறு சேர்த்து கிளற வேண்டும்.

பின்பு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரியை நன்கு வறுத்து சேர்க்கவும். கடைசியாக  பாதாமை தூவி இறக்கவும். இப்போது சூடான சுவையான ஓட்ஸ் தர்பூசணி பாயாசம் ரெடி.

 

Leave a Comment