மிர்சி கா சாலன் செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா

மிர்சி கா சாலன் ஒரு மிகசிறந்த ஹைதரபாத் உணவாகும்.

  • மிர்சி கா சாலன் செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா?

மிர்சி கா சாலன் செய்வது எப்படி என்பதை பற்றி பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள்:

பஜ்ஜி மிளகாய் – 2௦௦ கிராம்

எள்ளு விதை – 5 கிராம்

வெங்காயம் – 2

புளி – 25 கிராம்

வெல்லம் – 2௦ கிராம்

மிளகாய் தூள் – இரண்டு தேகரண்டி

தனியா தூள் – நான்கு தேகரண்டி

வேர்கடலை – 75 கிராம்

முந்திரி – 5௦ கிராம்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேபில்லை – சிறிதளவு

செய்முறை:

 

முதலில் வெங்காயம், தனியா, எள்ளு, வேர்கடலை, முந்திரி, மிளகாய் தூள் ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பஜ்ஜி மிளகாயை வறுத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு மற்றோரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேபில்லை போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சேர்த்த மசாலாவில்  நன்கு வெந்ததும்  புளி கரைத்து சேர்க்கவும். பின்பு வெல்லத்தையும்  சேர்க்க வேண்டும். இறுதியாக வறுத்து வைத்த பஜ்ஜி மிளகாயை சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சூடான சுவையான மிர்சி கா சாலன் ரெடி.

Leave a Comment