இனிஅடிக்கடி சார்ஜ் செய்ய தேவையில்லை..! வந்துவிட்டது ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!

ஹோண்டா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர், ஹோண்டா EM1-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்களிடையே பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அடிக்கடி பெட்ரோல் விலை உயருவதால், பலரும் மின்சார ஸ்கூட்டர்கள் பக்கம் சாய்ந்துள்ளனர். தற்போது பல சிறந்த மற்றும் பிரம்மாண்டமான மின்சார ஸ்கூட்டர்கள் சந்தையில் விற்பனையாகி வருகிறது.

HondaEM1e
HondaEM1e Image source EVsInsider

எனவே, பல இரு சக்கர வாகன நிறுவனங்கள் தற்போது இ-ஸ்கூட்டர்களில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இப்போது ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவும் மின்சார வாகன உலகில் நுழைந்து, தனது மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா EM1-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா EM1 பேட்டரி:

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரை எலக்ட்ரிக் மொபெட் என்று அழைக்கிறது. ஹோண்டா ‘மொபைல் பவர் பேக் இ’ லித்தியம் அயன் பேட்டரி இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தியுள்ளது. இது தோராயமாக 10 கிலோ எடை கொண்டது. இதில் 1.47 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய, நிறுவனம் 270W ஏசி சார்ஜரை வழங்கியுள்ளது.

EM1e
EM1e Image source Twitteras miyashita
ஹோண்டா EM1 பேட்டரி நெட்வொர்க்:

இந்த சார்ஜர் மூலம், இந்த ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 6 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். பேட்டரி தீர்ந்து விட்டால் மாற்றக்கூடிய பேட்டரி நெட்வொர்க் வசதியின் மூலம் இரண்டாவது சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைப் பெறமுடியும். இதனால், இந்த ஸ்கூட்டரை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

EMIe
EMIe EM1e Image source Twitteras miyashita

ஹோண்டா EM1 அம்சம் மற்றும் வேகம்:

ஹோண்டா நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 45 கிமீ வேகத்தில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்து அந்நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 48 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், ட்வின் ஷாக் அப்சார்பர்ஸ், கோம்பி பிரேக்கிங் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற அம்சங்கள் உள்ளன.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.