32.2 C
Chennai
Thursday, June 1, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

தலைவர் தரிசனம்…ரஜினிகாந்தை சந்தித்த வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்..! வைரலாகும் புகைப்படங்கள்.!!

தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் ரஜினியின் தீவிர ரசிகர்களாக பலரும் இருக்கிறார்கள். சினிமா துறையை போல கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட ரஜினியின் ரசிகர்கள் தான்.

Rajinikanth
Rajinikanth [Image source : twitter/ @RajiniFollowers]

எனவே, பல கிரிக்கெட் வீரர்கள் ரஜினியை சந்தித்து அதற்கான புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், கொல்கத்தா அணியின் இளம் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் இருவரும் ரஜினி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வருண் சக்கரவர்த்தி ” இரவு வானில் தினமும் ஒரு மில்லியன் நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டாரை பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது நடக்குமா என காத்திருந்தேன் ஆமாம்..இப்போது  அது நடந்தது… “ஒரே & ஓன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” சாரை சந்தித்தேன்.
அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினராக தீவிரமாக உணர்ந்தேன்.“LIVING WITH HIMALAYAN MASTERS” என்ற அற்புதமான புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு நன்றி சார்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

வெங்கடேஷ் ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” தலைவர் தரிசனம் என் இதயத்திலும் நினைவுகளிலும் என்றென்றும் பதிந்துவிட்டது.சிறுவயதில் என் கனவுகள் அனைத்தையும் வடிவமைத்த ரஜினிகாந்தை கடைசியாக சந்தித்தேன். என்ன ஒரு  அனுபவம். அவருடன் பேசும்போது பல வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தது போல் உணர்ந்தோம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.