கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்க இந்த பாட்டி வைத்தியத்தை செய்து பாருங்கள்..!

நமது உடலில் இருக்க கூடிய கொலெஸ்ட்ராலில் அளவு அதிகமாகினால் நம் உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும். கொலெஸ்ட்ராலில் பொதுவாக இரு வகை உண்டு. இதில் நல்ல கொலஸ்ட்ரால் என கூறப்படுபவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த கூடியவை.

ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் என்பவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் இதய நோய்கள், உடல் பருமன் முதலிய பல உடற்கோளாறுகள் உண்டாகும். இதை தடுக்க பாட்டி வைத்தியம் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம்.

பூண்டு
மருத்துவ குணம் அதிகம் கொண்ட பூண்டை இந்திய சமையலில் நாம் அதிகம் பயன்படுத்துவோம். அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், மேலும் இது போன்ற பல்வேறு மூல பொருட்கள் பூண்டில் இருப்பதால் பூண்டை நாம் அதிகம் உணவில் சேர்த்து கொண்டால், கொலஸ்ட்ராலின் அளவை மிக வேகமாக குறைத்து விடும். இதற்கு தினமும் 1 பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் போதும்.

கொத்தமல்லி விதைகள்
ஆயுர்வேத பயன்பாடு அதிகம் கொண்ட இந்த கொத்தமல்லியை நாம் உணவில் பொடி போன்று சேர்த்து கொண்டால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இது உதவும். இதை தவிர இதில் வைட்டமின் சி, போலிக் அமிலம், பீட்டா கேரட்டின் போன்றவையும் அதிக அளவில் உள்ளன.

கிரீன் டீ
பாலிபீனால்ஸ் என்கிற மூல பொருள் கிரீன் டீயில் அதிகம் நிறைந்திருப்பதால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலெஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவும். தினமும் 2 வேளை டீ குடித்து வந்தாலே இதற்கு நல்ல தீர்வை பெறலாம்.

நெல்லிகனி
கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய தன்மை நெல்லிக்கனியில் உள்ளது. நம் உடலில் உள்ள பலவித நோய்களை குணப்படுத்த நெல்லிக்கனி அருமருந்தாக செயல்படும். ஆகவே, வாரத்திற்கு 2 முறை நெல்லி சாற்றை குடித்து வாருங்கள்.

வெந்தயம்
வைட்டமின் ஈ வெந்தயத்தில் அதிக அளவில் உள்ளதால் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும் தன்மை இதற்குண்டு. எனவே, பாட்டி வைத்தியத்தின் படி தினமும் அரை ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் நல்லது.

Leave a Comment