விவசாய கடன் வழங்கக்கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க கூடாது என உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு.

கோவை பரம்பிக்குளம் ஆழியாறு இணைப்பு திட்டம் கால்வாயில் இருந்து 2 நபர்களுக்கு தண்ணீர் எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் தண்ணீரை சமமாக பங்கிட வேண்டும். இந்த 2 நபர்கள் அனுமதி பெற்று சட்டவிரோதமாக அதிகமாக தண்ணீர் எடுப்பதாக மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு  உத்தரவிட்டார். மேலும், சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்பு பட்டியலில் சேர்க்க உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

author avatar
murugan