#Breaking : ஆன்லைன் விளையாட்டு தடை.! அவசர சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

ஆன்லைன் விளையாட்டு காரணமாக பலர் அதிக பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வதால் கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. அதன் பிறகு சட்டசபையில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு,  ஆளுநர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு பிறப்பித்த ஆன்லைன் அவசர சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு இந்த வழக்கை தொடுத்துள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டை விளையாட வருபவர்கள் எச்சரிக்கை கொடுக்கபட்ட பின்னர் தான் விளையாட அனுமதிக்கபடுவார்கள். ஆதலால் அதனை சூதாட்டம் என கருதகூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதே போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கோடு சேர்த்து இந்த வழக்கு விசாரணை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment