கேரளா கடற்கரையில் 1,200 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்..6 பேர் கைது!

1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஏற்றிச் சென்ற படகை கேரளக் கடற்கரையில் வளைத்து பிடித்த போலீஸ்.

இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) ஒருங்கிணைந்த நடவடிக்கையில், கேரளாவின் கொச்சி கடற்கரையில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் ஏற்றிச் சென்ற படகை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, NCB துணை இயக்குநர் ஜெனரல் SK சிங் கூறுகையில், படகு பறிமுதல் செய்யப்பட்டு, 6 ஈரானிய பணியாளர்கள் NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என தெரிவித்தார். ஆப்கானில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் போதைப் பொருளை கடந்த முன்றதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment