ஹெலிகாப்டர் விபத்து – நாளை பார்வையிடுகிறார் புதிய இராணுவ தளபதி!

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை பார்வையிடுகிறார் புதிய ராணுவ தளபதி.

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை புதிய ராணுவ தளபதி நரவனே பார்வையிடுகிறார். காலை 10.30 மணியளவில் வெலிங்டனில் அஞ்சலி செலுத்திவிட்டு விபத்து நடந்த இடத்தை பார்வையிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்