தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் இந்திய பெருங்கடல் – வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்  இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது . இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக் கடல் சந்திக்கும் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.

Leave a Comment