தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறப்பட்ட வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக இருந்த  தீபக் மிஸ்ராவின்பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முடிவடைந்தது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார்  தீபக் மிஸ்ரா.மத்திய அரசு அவரின் பரிந்துரையை  ஏற்றது.இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ரஞ்சன் கோகோய்க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ரஞ்சன் கோகோய் குடியரசுத் தலைவர் முன்னிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக  பதவியேற்றார்.இவர் உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதி ஆவார்.அதேபோல்  வட கிழக்கு மாநிலத்திலிருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆவார்.
Image result for RanjanGogoi

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.மேலும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின்  நீதிபதிகளுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நீதித்துறை வட்டாரத்தில் இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனால் இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில்  பாலியல் புகாரில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறப்பட்ட வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில்,நீதித்துறையை கட்டுப்படுத்த நினைப்பது யார் என்பதை கண்டறிவது அவசியம் .பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்தி இயக்க முடியாது .நீதித்துறையை கட்டுப்படுத்தி இயக்க நினைப்பவர்களை கண்டறிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் .கடந்த 3 , 4 ஆண்டுகளாக நீதித்துறை மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.