பூசணி விதையை தூக்கி போடாமல் அப்படியே சாப்பிட்டால் என்னவித உடல் மாற்றங்கள் ஏற்படும்?

பூசணிக்காயை பார்த்தாலே குழந்தைகள் தெறித்து ஓடுவார்கள். காரணம் இதை நம் வீட்டில் சமைத்து விடுவார்களோ என்கிற பயம் தான். இன்றும் பூசணிக்காயை சாப்பிடவே மாட்டேன் என பல இளம் வயதினர் கூட அடம் பிடித்து வருகின்றனர்.

பூசணி சாப்பிடவதற்கு கஷ்டப்படுவோருக்கு பூசணி விதை சிறந்த தீர்வாக உள்ளது. பூசணிக்காயில் இருப்பது போன்றே இதன் விதைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலுக்கு கிடைக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

ஆண்களின் புற்றுநோய்
ஆண்களின் பிறப்புறுப்பில் உண்டாக கூடிய புற்றுநோயை தடுக்கும் தன்மை பூசணி விதையில் உள்ளதாம். காரணம் இதில் அதிக அளவில் உள்ள ஜிங்க் தான். மேலும் மலட்டு தன்மை உள்ள ஆண்களுக்கும் இது நல்ல தீர்வை தருகிறது.

எதிர்ப்பு சக்தி
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ் பூசணி விதையில் இருப்பதால் மிக எளிதில் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுவாக்கும். எனவே, உடலில் உண்டாக கூடிய நோய் தொற்றுகளில் இருந்து உங்களை காக்கும்.

இதய நோய்கள்
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை பூசணி விதைக்கு உண்டு. ஆதலால், இதய நோய்கள் உண்டாகாமல் நீண்ட ஆயுளுடன் நீங்கள் இருக்கலாம். மேலும், மெக்னீசியமும் இதில் அதிக அளவு இருப்பதால் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்து கொள்ளும்.

உடல் எடை
பூசணி விதையை ஒரு ஸ்னாக் போன்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதில் குறைத்து விடலாம். செரிமான பிரச்சினை, மலச்சிக்கல் ஆகியவற்றையும் இது குணப்படுத்தி விடும்.

சர்க்கரை நோய்
சர்க்கரை வியாதியால் அவதிப்படும் பலருக்கும் பூசணி விதை அருமருந்தாக இருக்கும். இந்த விதைகளை சாப்பிட்டு வருவதால் இன்சுலின் அளவு அளவு சீராக இருக்கும். மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைய தொடங்கும்.

முடி வளர்ச்சிக்கு
வைட்டமின் சி, பூசணி விதையில் நிறைந்துள்ளது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் முடியின் வளர்ச்சி கூடும். இதை அப்படியே சாப்பிட்டாலும் இந்த பலன் உங்களுக்கு கிடைக்கும்.

Leave a Comment