ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்  சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்  சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டர் பதிவில், ‘எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்.  அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன்.  என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.  பாதுகாப்புடன் இருங்கள்.  கவனமுடன் இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.