எங்களை சீண்டினால் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு இருக்காது.. பாஜக கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சை பேச்சு.!

ராணுவ வீரர்களை சீண்டுவது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசியலுக்கும் நல்லதல்ல. எங்களுக்கு பரீட்சை வைத்து பார்க்காதீர்கள். – முன்னாள் ராணுவத்தினர் சர்ச்சை பேச்சு. 

சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்னகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி கிராமத்தில் பிரபு எனும் ராணுவ வீரருக்கும். அப்பகுதி திமுக கவுன்சிலர் சின்னசாமி எனபவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது. இதில் படுகாயமடைந்த ராணுவ வீர்ர் பிரபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யபட்டனர்.

ஆர்ப்பாட்டம் : இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் இன்று சென்னையில் முன்னாள் ராணுவத்தினர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒரு முன்னாள் ராணுவவீரர் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை பேச்சு : அவர் பேசுகையில்,  ராணுவ வீரர்களை சீண்டுவது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசியலுக்கும் நல்லதல்ல. எங்களுக்கு பரீட்சை வைத்து பார்க்காதீர்கள். அப்படி செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. இங்கே இருப்பவர்கள் அனைவரும் முன்னாள் ராணுவத்தினர். நங்கள் குண்டுவைப்பதில் கெட்டிக்காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டை போடுவதில் கெட்டிக்காரர்கள்.  நாங்கள் எதுவும் செய்வதாயில்லை. எங்களை எதுவும் செய்ய வைத்து விடாதீர்கள். என முன்னாள் ராணுவத்தினர் பேசியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment