ரிலீசிற்கு தயாராகிவிட்டது துருவ நட்சத்திரம்! விரைவில் இறுதிக்காட்சி படப்பிடிப்பு!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தற்போது நல்ல காலம் பிறந்துவிட்டது போல, சில வருடங்களாக தேங்கி இருந்த அவரது படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசிற்கு வர காத்திருக்கின்றன.

செப்டம்பர் 6ஆம் தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது. அடுத்து கோமாளி பட தயாரிப்பாளர் தயாரிக்கும் வருண் கதாநாயகனாக நடிக்க புதிய படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்ததாக இறுதிக்காட்சி படமாக்கப்படாமல் இருந்த விக்ரமின் துருவநட்சத்திரம் தற்போது தயாராக உள்ளதாம். இந்த படத்தின் இறுதிக்காட்சி விரைவில் படமாக்கப்பட்டு, டிசம்பர் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, சூர்யாவின் சூரரை போற்று திரைப்படமும், சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படமும் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது  குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.