குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி ஜாமீன் பெற்ற சில தினங்களிலேயே மீண்டும் கைது ..!

குஜராத் மாநில இளம் தலித் தலைவரும், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் எனும்  அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகியவர் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர் பாதிக்கப்படக்கூடிய தலித் சமூக மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருந்து வருகிறார்.

இவர் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வாக்கெட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மேவானி 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி நள்ளிரவு 11 மணியளவில் அசாம் போலீசார் திடீரென்று ஜிக்னேஷ் மேவானியை கைது செய்து அழைத்து சென்றனர். இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து இவருக்கு அஸ்ஸாம் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கிய சில மணிநேரங்களிலேயே ஜிக்னேஷை உடனடியாக அடுத்த வழக்கில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்குப் பின்பதாக மேவானி மீண்டும் கோக்ரஜார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal