டிசம்பர் 12- ஆம் தேதி குஜராத் முதல்வர் பதவியேற்பு..!

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில்,நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக குஜராத் பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment