ஐபிஎல் 2024 : குஜராத் திரில் வெற்றி..! முதல் தோல்வியை தழுவிய ராஜஸ்தான்..!

ஐபிஎல் 2024: குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணி மோதியது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணியில்  உமேஷ் யாதவ், ரஷித் கான், மோகித் சர்மா தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 48 பந்தில் 76 ரன்களும், சஞ்சு சாம்சன் 38 பந்தில் 68* ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 197 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத்  அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன்,  சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் நிதானமாகவே விளையாடி வந்த நிலையில் 9 -வது ஓவரில் சாய் சுதர்சன் 29 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் என மொத்தம் 35 ரன்கள் எடுத்து இருந்தபோது அவுட் ஆனார். அடுத்து மேத்யூ வேட் களமிறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் மழை குறுக்கிட்டதால் 10 ஓவரில் போட்டி தற்காலிகமாக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

பின்னர் மழை நின்ற பின்னர் 11 ஓவரை குல்தீப் சென் வீசினார். அப்போது முதல் பந்திலே மேத்யூ வேட் போல்ட் ஆனார். அடுத்து வந்த அபினவ் மனோகர் அடுத்த 2-வது பந்தில் போல்ட் ஆனார். 4 விக்கெட்க்கு களமிறங்கிய விஜய் சங்கர் வந்த வேகத்தில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியாக குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் குல்தீப் சென் 3 விக்கெட்டையும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டையும்,  அவேஷ் கான் 1 விக்கெட்டையும்  பறித்தனர்.

குஜராத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தானி அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் தழுவி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

author avatar
murugan