ஆசிய , இந்திய புக் ரெக்கார்டு தொடர்ந்து கின்னஸ் சாதனை படைத்த சிறுமி ..!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்லி பகுதியை சேர்ந்த சிறுமியான ஓஜல் நல்வடே (12) ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று காலை கண்களை மூடிக்கொண்டு ஸ்கேட்டிங்கில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கண்களை மூடிக்கொண்டு ஸ்கேட்டிங்கில் வேகமான பயணம் செய்து ஓஜல் 51 வினாடிகளில் 400 மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.இவரது இந்த சாதனையை கின்னஸ் அதிகாரிகள் ஏற்று சான்றிதழ் கொடுத்தனர்.
மேலும் ஓஜல் நல்வடே ஏற்கனவே ஆசிய புக் ரெக்கார்டு மற்றும் இந்திய புக் ரெக்கார்டு இரண்டிலும் இடம்பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan