#IPL2022: ஹட்-ட்ரிக் தோல்வியை சந்தித்த ஹைதராபாத்.. புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்!

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து 11 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியை சந்தித்தது.

15-வது ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடந்து முடிந்த போட்டியில் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தனர்.

170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் நிதானமாக ஆடிவந்த நிலையில், 16 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து ராகுல் திரிபாதி களமிறங்க, 13 ரன்கள் அடித்து அபிஷேக் ஷர்மா தனது விக்கெட்டை இழந்தார்.

மறுமுனையில் இருக்கும் ராகுல் திரிபாதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 12 ரன்கள் அடித்து மார்க்ரம் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய நிகோலஸ் பூரன் சிறப்பாக அடிவர, 44 ரன்கள் அடித்து ராகுல் திரிபாதி தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் நிகோலஸ் பூரன் 34, வாஷிங்டன் சுந்தர் 18 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இறுதியாக ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து 11 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியை சந்தித்தது. பந்துவீச்சில் ஆவேஷ் கான் 4 விக்கெட்களும், ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்களும், க்ருனால் பாண்டியா தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள். இதன்மூலம் ஹைதராபாத் அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலே நிலைத்து வருகிறது.