கொரோனா சிகிச்சைக்கான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

  • இன்று மத்திய நிதியமைச்சர் தலைமையில் 44 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
  • இதில் புதிய வரிவிலக்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் இன்று 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதியமைச்சர்கள் மத்திய மாநில அரசின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சைக்கு எதிராக அளிக்கப்படக் கூடிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அம்போட்டெரிசின் பி மற்றும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டோசிலிசுமாப் மருந்து ஆகியவற்றிற்கு முற்றிலுமாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் வெண்டிலேட்டர், மாஸ்க், பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்ப சோதனை கருவி ஆகியவற்றிற்கான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்களுக்கான வரி 28% இல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், இந்த வரி குறைப்பு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்து மற்றும் மருத்துவ பொருட்களுக்கான வரிகள் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான விவரம் இதோ,

author avatar
Rebekal