ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி.. – நிதியமைச்சகம்

ஜூலையில் ரூ.1,48,995 கோடி மொத்த ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சகம் தகவல்.

நாட்டில் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் ரூ.1.49 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ப்போதும் இல்லாத அளவுக்கு வசூலிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச வருவாய் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இதே மாத ஜிஎஸ்டி வருவாயை விட ஜூலை மாத வருவாய் 28% அதிகம். இதுவரை பதிவு செய்யப்படாத ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் 2022 இல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், 5 மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.8,449 கோடியாக உள்ளது என்றும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment