” பேரன்பு ” உலகளவில் கொண்டாடப்படும்..இயக்குனர் உறுதி….!!

பேரன்பு படம் உலக அரங்கில் கொண்டாடப்படும் என்று இயக்குநர் ராம் கூறியுள்ளார்.
நடிகர் மம்மூட்டி நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கிய படம் ‘பேரன்பு’ . இந்த படத்தை பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, லிவிங்ஸ்டன், சண்முகராஜா, ‘பூ’ ராம், வடிவுக்கரசி என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்பத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.  இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது.
 இந்நிலையில் இந்த படம் குறித்து இதன் இயக்குனர் ராம் தெரிவிக்கையில் , இந்த படத்தில் கதாநாயகன் மம்முட்டி, 10 வருடங்களுக்குப்பின் தமிழ் படத்தில்  நடித்துள்ளார் .இந்த படம் சர்வதேச திரைப்பட விழா உள்பட உலக அரங்கில் கொண்டாடப்படும் படம். பேரன்பு படத்தில் நடிகர் மம்முட்டியின் சிறந்த நடிப்பை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment