சிட்னி டெஸ்டுக்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு பெரும் பின்னடைவு- டிராவிஸ் ஹெட்-க்கு கொரோனா..!

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது. இரு அணிகளும் இடையே 4-வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 5 முதல் ஜனவரி 9 வரை சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனது  டுவிட்டரில் தெரிவித்துள்ளது. சிட்னி டெஸ்ட் தொடங்கும் முன்பே ஆஸ்திரேலியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

வழக்கமாக செய்யப்பட்ட பரிசோதனையில் ஹெட்-க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், அவர் அடுத்த 7 நாட்களுக்கு மெல்போனில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் மீதமுள்ள அனைத்து வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் PCR மற்றும் RAT சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அணியில் மிட்ச் மார்ஷ், நிக் மேடின்சன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் இணைந்துள்ளனர். ஹோபார்ட்டில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில்  ஹெட் விளையாடுவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது

author avatar
murugan