திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ.1,000 வழங்க அரசாணை வெளியீடு!

திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ.1,000 வழங்க அரசாணை வெளியீடு.

சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த பகுதிகளில் உள்ள வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மேற்கண்ட 4 மாவட்டங்களில் உள்ள 501 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்க 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடும் 1,666 திருநங்கைகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் 16 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், தூய்மைப்பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க 28 லட்ச ரூபாயும், பழங்குடியின மக்களுக்கு 6 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.