முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற ஆளுநர் தமிழிசை.!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா கடிதத்தை ஏற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

புதுச்சேரியில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பானமையை நிரூபிக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார். சட்டப்பேரவையில் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து, முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் தமிழிசை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதல்வர் நாராயணசாமி தனது மற்றும் அமைச்சரவை பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார் என்றும் அமைச்சரவை சகாக்கள், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கூட்டணி அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்