அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு.!

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பங்குத்தொகை மற்றும் தட்டு காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலிகளில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 8,340 பேருக்கும் மேலும் ரூ.1000 நிவாரணம் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கால பூஜை நிதியுதவி பெறும் கோயிலிகளின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.1000 வழங்கியிருந்த நிலையில், தற்போது கொரோனா தாக்கத்தால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. இதனால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்