ஒரு நாளைக்கு 10 லட்சம்.! விண்ணை முட்டும் நடிகர் கெளதம் மேனனின் மார்க்கெட்.!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகராக மாறிய பிறகு அவரது சம்பளம் ஒரு நாளைக்கு 10 எனும் அளவிற்கு உயர்ந்துள்ளதாம்.

மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா எனும் என்றென்றும் ரசிகர்கள் மனதில் பேசப்படும் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். அதன் பிறகு சொந்தமாக எடுத்த சில படங்கள் படுதோல்வி அடைந்ததால் பெரும் கடன்சுமைக்கு ஆளானார்.

அதன் பின்னர் வெவ்வேறு இயக்குனர்கள் படத்தில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் கெளதம் மேனனை ரசிகர்கள் வெகுவாக கொண்டாட ஆரம்பித்தனர். அவரது மார்க்கெட்டும் உயர்ந்தது.

அதிலும், மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் அவரது காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது அவரது சம்பளத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சர்யத்தில் இருக்கிறதாம்.

ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். தயாரிப்பாளர்களும் அதனை கொடுக்க தயாராக தான் இருக்கிறார்கள் போலும். ஏனென்றால், அவருடைய நடிப்பும் அவரது இயக்கம் போல தனித்துவமாக இருக்கிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.