கோத்தபய ராஜபக்சேவுக்கு குறுகிய கால பயண அனுமதியை வழங்கியது சிங்கப்பூர்

சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே (73) தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவருக்கு குறுகிய கால பயண அனுமதி (STVP) வழங்கப்பட்டது என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) நேற்று (ஜூலை 20) தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே, இலங்கையின் சுதந்திர வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பல மாதங்களாக நீடித்த போராட்டங்களைத் தொடர்ந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜூலை 14 ஆம் தேதி அவர் சிங்கப்பூர் சென்ற அவருக்கு 14 நாள் குறுகிய கால பயண அனுமதியை வழங்கப்பட்டுள்ளது .மேலும் ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என்றும் அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சமூகப் பயணங்களுக்காக சிங்கப்பூருக்கு இலங்கையிலிருந்து வரும் பயணிகளுக்கு பொதுவாக 30 நாட்கள் வரையிலான STVP வழங்கப்படும்.

இங்கு தங்கியிருப்பதை நீட்டிக்க விரும்புபவர்கள் தங்கள் எஸ்டிவிபி நீட்டிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அவர்களின் தேவைகள் அடிப்படையில் மதிப்பிடப்படும் என்று ஐசிஏ தெரிவித்துள்ளது.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment