செப்டம்பர் 27 க்குப் பிறகு இனி இவர்கள் கூகுள் பயன்பாடுகளில் உள்நுழைய முடியாது – கூகுள் அறிவிப்பு..!

பழைய ஆண்ட்ராய்டு மொபைல்போன் வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 27 க்குப் பிறகு கூகுள் பயன்பாடுகளில் உள்நுழைய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீங்கள் இன்னும் ஒரு பழைய ஆண்ட்ராய்டு மொபைல் போன் 2.3.7 கிங்கர்பிரெட் வெர்ஷனை பயன்படுத்துகிறீர்களா?,அவ்வாறு,நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் இனி உங்கள் மொபைல் போனில் கூகுள் பயன்பாடுகள் இயங்காது.

அதாவது,ஆண்ட்ராய்டு மொபைல்போன் 2.3.7 கிங்கர்பிரெட் அல்லது பழைய ஆண்ட்ராய்டு போன்களில் ஜி-மெயில்(Gmail), யூ-டியூப் மற்றும் கூகுள் மேப் போன்ற கூகுள் பயன்பாடுகளை செப்டம்பர் 27 முதல் பயன்படுத்த முடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால்,பயனர்கள் இன்டர்நெட்டில் உள்நுழைய முடியும்.இதனைத் தவிர்க்க,பயனர்கள் ஆண்ட்ராய்டு (Android) 3.0 அல்லது ஆண்ட்ராய்டு 4.0 வை அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும்.

மேலும்,இது தொடர்பாக கூகுள் நிறுவனம் கூறியதாவது:”எங்கள் பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்க எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக,கூகுள் ஆனது ஆண்ட்ராய்டு 2.3.7 உள்ள மொபைல் சாதனங்களை செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் கூகுள் பயன்பாடுகளில் உள்நுழைய அனுமதிக்காது”, என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.இருப்பினும்,உங்கள் பழைய ஆண்ட்ராய்டு போனில் செப்டம்பர் 27 க்குப் பிறகு ஜி-மெயில்(Gmail), யூ-டியூப் போன்ற சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் பயனர்பெயர் அல்லது பாஸ்வேர்ட் பிழைகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.