இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி..! கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமில்லை..!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த வகையில், சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த 3 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,705-க்கும், சவரனுக்கு ரூ.45,640-க்கும் விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை கடந்த 3 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.78.70-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.78,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.