பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 6ஆம் தேதி நடைபெற்று என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்த நிலையில், 2022-23ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15 (அதாவது) இன்று முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டம் வாரியாக நடத்தப்படும் இந்த கலந்தாய்வில் அரசு தொடக்கப் பள்ளி வரை மேல்நிலைப் பள்ளி வரையில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள். கடந்த 6ஆம் தேதி தொடங்க இருந்த இந்த கலந்தாய்வு, நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டு இன்று தொடங்குகிறது.