குட்நியூஸ்!மீண்டும் 9 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியா:கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 249 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,18,901 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  2000 குறைவு.மேலும்,538 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,18,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 249 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,65,911 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,510  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை   3,39,34,547 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.31% ஆக அதிகரிப்பு.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,18,443 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.534 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,16,87,28,385  பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 32,99,337 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.